மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ் குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கந்தாட குடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதுதான் புனித் மரணம் அடைந்தார். அவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்தும், காட்சிகளை மாற்றியும் இந்த படத்தை முடித்துள்ளனர்.
இந்த படம் கர்நாட மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது தொடர்பான படமாக உருவாகி உள்ளது. எனவே இந்த படத்தின் டீசரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என்று புனித் ராஜ்குமார் விரும்பி இருக்கிறார். இந்த தகவலை அவரின் மனைவி அஸ்வினி வெளியிட்டிருந்தார். இது மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தின் டீசரை பார்த்து விட்டு அதுகுறித்து மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு(நடிகர் புனித் ராஜ்குமார்) வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கந்தாட குடி என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.