டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் அது குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஷாருக்கான்.
அதில், 'கடந்த 30 நாட்கள் என்ன ஒரு சிறப்பான அனுபவம். தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடினேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட உரையாடல். விஜய் சுவையான உணவு அளித்தார். இயக்குனர் அட்லி மற்றும் பிரியா ஆகியோரின் விருந்தோம்பலுக்கு நன்றி. தற்போது சிக்கன் 65 ரெசிபி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்' என்று பதிவு போட்டு இருக்கிறார் ஷாருக்கான்.
இதையடுத்து அவரது பதிவுக்கு இயக்குனர் அட்லி ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். அதில், 'மிக்க நன்றி சார். நீங்கள் சென்னை வந்தது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் சென்னையில் நடந்த இந்த படப்பிடிப்பு மறக்க முடியாத நிகழ்வு. சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இதன் மூலம் ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். லவ் யூ சார். விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் அட்லி.




