தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரஜினி அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தியும், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இரண்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களில் ரஜினியின் 170 வது படத்தை சிபி சக்ரவர்த்தியும், 171-வது படத்தை தேசிங்கு பெரிய சாமியும் இயக்குவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.