மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக இந்தப் படம் தேர்வு செய்யப்படும் என்று தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் தேர்வு செய்யப்பட்டது.
இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாகப் போட்டியில் இறங்கியுள்ளது 'ஆர்ஆர்ஆர்'. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் படக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் போட்டியில் குதிக்கிறார்கள். இத்தனை பிரிவுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடுவதை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் படத்தில் 'ஐந்து நிமிடமே வந்த ஆலியா பட்' சிறந்த துணை நடிகைக்கான விருதுகளுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.
படத்தில் வெள்ளைக்காரனை வில்லனாகக் காட்டிவிட்டு, அவனிடமே விருதுகளுக்காக போய் நிற்பதா என்றும் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை தெலுங்கு ஊடகங்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தெலுங்குப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் பயங்கரமாக கிண்டலடித்து வருகிறார்கள். “ஆஸ்கர் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்'' என்ற தலைப்பிலான மீம்ஸ்கள் நேற்று முதல் அதிகமாகப் பரவி வருகிறது.