டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ரீ '. இசையமைப்பாளர் தினா வின் தம்பி ஹரிஜி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சுந்தர வடிவேல் கூறியதாவது: ஒரு காலத்தில் அக்கம் பக்கம் அனைவரிடமும் நாம் நன்றாகப் பேசிப் பழகினோம். தூரத்தில் உள்ள நெருங்கிய உறவினரை விட அருகில் பக்கத்தில் உள்ள எதிரியால் நமக்கு ஆதாயம் உண்டு என்று சொல்வார்கள். அந்த வகையில் இப்போது நாம் தனிமைப்பட்டு கிடக்கிறோம் .
ஒரு பத்திரிகைச் செய்தி பார்த்தேன். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க, தனிமையில் வாழ்ந்த ஒரு பெண்மணி தனியே சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தார். வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார். நான்கு நாட்களாக வீடு திறக்கப்படாதது அறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டுப் போய்ப் பார்த்தபோது துர்நாற்றம் வீசி இருக்கிறது. போலீஸ் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது கட்டிலில் உட்கார்ந்த நிலையிலே இறந்திருக்கிறார்.
அந்த அளவிற்குத் தனிமையில் மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படி மன நெருக்கடிக்கு ஆளாகும் டெலுஷனல் டிஸ்ஆர்டர் எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப் படத்தில் கூறி இருக்கிறேன். இரண்டு வீடுகளை வைத்துக்கொண்டு இந்த முழுப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு பெரிய படத்திற்கான அனைத்து நேர்த்தியுடனும் இப்படம் உருவாகி இருக்கிறது.




