நகை கடத்தல் நடிகையின் கூட்டாளி நடிகருக்கு சிறையில் சொகுசு வசதி ; வெளியான அதிர்ச்சி வீடியோ | எதிர்பார்த்த 'வியூஸ்கள்' பெறாத 'தளபதி கச்சேரி' | ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர் | 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார் : இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை | சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! |

தெலுங்கு படங்களை ஒளிபரப்பு செய்து வந்த ஆஹா ஓடிடி தளம் தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்ட பேட்டை காளி என்ற புதிய வலை தொடர் வெளியாக உள்ளது. இது குறித்த மோஷன் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழர்களின் முக்கிய பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தொடர்பான முதல் தமிழ் இணைய நிகழ்ச்சி இது. மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க, எல். ராஜ்குமார் இயக்குகிறார். இந்த தொடர் தீபாவளி முதல் ஆஹா ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு தமிழில் வெளியாகும் இந்த பேட்டைகாளி என்ற ஜல்லிக்கட்டு தொடரை வேறு மொழிகளில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள் .




