இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் 'ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்' படங்களை இயக்கிய அட்லி ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 'ஜவான்'. அனிருத் இசையமைக்க, ஷாரூக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இப்படத்திற்கான ஓடிடி, சாட்டிலைட் ஆகிய உரிமைகள் சுமார் 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமையையும், ஜீ டிவி குழுமம் சாட்டிலைட் உரிமையையும் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தை ஹிந்தியில் மட்டும் வெளியிடாமல் தென்னக மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள். அனைத்து மொழிகளுக்குமான உரிமைதான் அவ்வளவு விலை என்கிறார்கள். இப்படம் 2023 ஜுன் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.