நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

‛பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தின் உலக புகழ் பெற்றவர் ஜானி டெப். ஜாக் ஸ்பேரோ என்ற அவரது கேரக்டருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள், காமெடி கலந்த ஆக்ஷன் கேரக்டராக உருவாக்கப்பட்டிருந்தது.
ஜானி டெப் 2015ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். அதன்பிறகு பத்திரிகை ஒன்றில் ஜானி டெப் பற்றி ஆம்பர் எழுதியது சர்ச்சையை உண்டாக்கியது. ஜானி டெப் தன்னை குடித்து விட்டு துன்புறுத்தியதாகவும், செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் ஜானி டெப்பின் இமேஜ் பறிபோனது, அவர் நடிக்க இருந்த படங்களும் கைநழுவி போனது.
இதனால் ஆம்பர் எழுதிய கட்டுரை தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஜானிடெப்புக்கு இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க ஆம்பருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று ஆம்பர் கதறி அழ, அந்த பணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார் ஜானி டெப்.
இந்த நிலையில் இவர்களின் வழக்கு 'ஹாட் டாக் : தீ டீப் ஹார்ட் டிரையல்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. இது டாக்குமென்டரி கலந்த ஒரு திரைப்படமாகும். அதாவது நிஜகாட்சிகளும், கற்பனை காட்சிகளும், நிஜமான பேட்டிகளும் இணைந்து இந்த படம் இருக்கும்.
படத்தில் ஜானி டெப் கேரக்டரில் மார்க் ஹாப்கா நடித்திருக்கிறார். மேகன் டேவிஸ் ஆம்பர் ஹெர்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமெரிக்காவின் முன்னணி டிவி நடிகர்கள் இரு தரப்பின் வழக்கறிஞர்களாக நடித்திருக்கின்றனர். படம் செப்டம்பர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.