ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வருகிற 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர். மக்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும், அவர்கள் தியேட்டர் அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தேசிய சினிமா தினம் வருகிற 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் நிஜமான காரணம் அதுவல்ல. வருகிற 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல் ஹிந்தியில் ரன்பீர் கபூர் , அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரா திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.