ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகையான திஷா பதானி, தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய லோபர் என்ற படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று விட்டார். அதையடுத்து தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடித்து வரும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் திஷா பதானி . அந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42 வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் .
இந்த படம் குறித்து திஷா பதானி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் சூர்யாவுடன் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. இப்படம் சரித்திர கதையில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. இதுவரை வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடித்து வந்த நான் இந்த படத்தில் முதல் முறையாக ஒரு தனித்துவமான ஹீரோயினாக நடிக்கிறேன். ஒரு மகத்தான படத்தில் மாறுபட்ட வேடத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் திஷா பதானி.