காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
இயக்குனர் எச்.வினோத்துடன் அஜித் நடிக்கும் மூன்றாவது படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்கும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும், தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 3 வாரங்கள் நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்பில் சில பைக் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன் மற்றும் படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த பாங்காக் ஷெட்யூலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஏகே 61 ' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் அக்டோபருக்குள் முடிவடைந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் திரைக்கு வரலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.