8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை (ஆக.,31) வெளியாக இருக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு வார காலமாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சென்னை, ஐதராபாத் மதுரை, திருச்சி, கோவை மற்றும் கேரளா என மாறிமாறி பறந்து வருகிறார் விக்ரம். படத்தின் கதாநாயகிகளான ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன் ஆகியோரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அதேசமயம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் மற்றும் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இருவரும் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மியா தனது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் நான் சிங்கிளாக இருந்தேன். கொரோனா முதல் அலை தாக்கம் காரணமாக அடுத்து இடைவெளிவிட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியபோது நான் திருமணம் செய்து இருந்தேன். அடுத்து மீண்டும் இடைவெளி விட்டு படப்பிடிப்பு துவங்கியபோது நான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தேன்” என்று காமெடியாக பேச ஆரம்பித்தார்.
கீழே பார்வையாளர் வரிசையில் அமர்ந்து இதை கேட்டுக்கொண்டிருந்த விக்ரம், உடனே, “இதோ இப்போது படம் ரிலீசாகும் வேளையில் கொச்சு பேபியும் கூட வந்துவிட்டது” என்று கூறியதும் மியா முகத்தில் அவ்வளவு சந்தோஷம். உடனே தனது அருகில் இருந்த மியாவின் கணவரிடம் இருந்த அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மேடைக்கு ஏறிய விக்ரம், “இதுதான் கோப்ரா பேபி” என்று கூறியதும் பார்வையாளர்களிடம் சிரிப்பலை எழுந்தது.
விக்ரம் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு மேடை ஏறுவார் என எதிர்பார்த்திராத மியா ஜார்ஜ் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாகி, தனது கணவரையும் மேடைக்கு அழைத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இது என் வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.