ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கமல் நடித்த விக்ரம் படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே கமலின் தீவிர புரமோசன் பணிகள்தான். அதையே இப்போது எல்லோரும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். தற்போது கோப்ரா படத்தை கமலின் பாணியில் புரமோசன் செய்து வருகிறார் விக்ரம். படம் வருகிற 31ம் தேதி வெளிவர இருப்பதால் அதற்கு முன்னதாக சூறாவளி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார் விக்ரம்.
அதன்படி இன்று (23ம் தேதி) திருச்சி ஜோசப் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியில் தோன்றி கோப்ரா குறித்து பேசுகிறார். நாளை (24ம் தேதி) கோவை செல்கிறார், 25ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். அதை முடித்து விட்டு 26ம் தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அடுத்த நாள் 27ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்கிறார், 28ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப் பயணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.