ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இருவரும் பிரியப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இன்று அவர்களின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படம் சமக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பமானது. எனது மூத்த மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதி மொழி ஏற்கும் பள்ளியின் நிகழ்வை திங்கள் கிழமை காலையில் பார்க்கிறேன்,” என ஐஸ்வர்யா அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.