நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.
விஜய் 67 வது படத்தை ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் கதையில் இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் திரைக்கதையில் பல புதுமைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். முக்கியமாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கயிருக்கிறார்கள். சஞ்சய்தத், அர்ஜுன், பிரிதிவிராஜ், கவுதம் மேனன் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு அதிரடி வில்லன்களை தேடி வருகிறார்.
மேலும், இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தைப் போலவே பாடல்களே இல்லாத படமாக உருவாகிறது. ஆக்ஷன் திரைக்கதை என்பதால் பாடல் காட்சி இருந்தால் கதை ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை விஜய் படங்களில் புதுமையானதாகவும், முழுக்க முழுக்க தனது பாணி படமாக இயக்குவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.