சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கவர்ச்சிக்கன்னியாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. 80களில் அவருடைய கவர்ச்சி ஆட்டம் இல்லாத படங்களைப் பார்ப்பதே அரிது. 1996ம் ஆண்டு தனது 35வது வயதில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடன நடிகைகள் பலர் வந்தாலும் சில்க் ஸ்மிதா அளவுக்கு அவர்கள் பிரபலம் ஆகவில்லை என்பது உண்மை.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011ம் ஆண்டில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க 'த டர்ட்டி பிக்சர்' என்ற படம் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான கதை எழுதும் வேலைகளை கனிகா தில்லான் தற்போது செய்து வருகிறாராம். சில்க்ஸ் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்க்கை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் வித்யா பாலனே நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.