மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினர்களாக பாக்யராஜ், தம்பி ராமையா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தம்பிராமையா பேசும்போது, 'பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும் ஆனால் ஜீவி-2 படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப்படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குனராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்றார்.
பின்னர் பேசிய இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் பேசும்போது, 'தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது” என்று கூறினார்.