என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
ஜீவி படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல்பாகத்தில் நடித்த வெற்றியே நாயகனாக இதிலும் தொடர்ந்துள்ளார். விஜே கோபிநாத் இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் இடம் பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளனர். ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர் தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.
வெற்றி கூறுகையில், ‛‛ ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட கதைகளையே தேர்வு செய்கிறேன். முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை. ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்,'' என்றார்.
இந்த படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது. ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும். இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது. மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என்றார்.
ஜீவி 2 படம் வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி நேரடியாக "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.