பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
நடிகர் சூர்யா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் மனைவி ஜோதிகா உடன் இணைத்து 2டி என்டர்டெயின்மெண்ட் தாயரிப்பு நிறுவனம் மூலம் படங்களும் தயாரிக்கிறார். தனது சகோதரர் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை தயாரித்துள்ளார் சூர்யா. இந்தபடம் வெள்ளியன்று ரிலீஸாகிறது. மேலும் விருமன் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா மதுரையில் ஒருசில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கருடன் சூர்யாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . இந்நிலையில் சூர்யா தற்போது மனைவி ஜோதிகாவுடன் தற்போது மும்பைக்கு சென்றுள்ளார். அவர்களுடன் அவர்களுடன் மகள், மகனும் சென்றுள்ளனர். அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆகஸ்ட் 21-ம் தேதி தேதி முதல் சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சூர்யாஇணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் வணங்கான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.