பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? |
தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் பற்றி தான். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று இந்த போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இணைந்து பாடினார். தற்போது ஆராதனா பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா இதற்கு முன்னர் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.