மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
70களின் துவக்கத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் ஜெயசுதா. தெலுங்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில் “அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட சில படங்கள் அவர் நடித்த முக்கியமான படங்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஜெயசுதா பின்னர் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். 2001ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009ல் செகந்தராபாத் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன் பின் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயசுதா சமீபத்தில் தெலங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான ஏடெலா ராஜசேகரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன் பின் பாஜகவில் இணைய சம்மதித்துள்ளதாகவும் விரைவில் சேர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜகவில் ஏற்கெனவே தெலுங்குத் திரையுலகின் முன்னாள் முன்னணி கதாநாயகியான விஜயசாந்தியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல நட்சத்திரங்களும் பாஜகவில் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது ஜெயசுதாவும் இணைய உள்ளார்.