பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் |
நடிகை குஷ்பூ தன்னுடன் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் பயணித்தவர்களை சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது மகள்களை அழைத்துக்கொண்டு நடிகை ரம்பாவின் வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை சந்தித்துள்ளார் குஷ்பூ.
இது குறித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்பூ, “என்னுடைய ஹீரோவை சந்தித்தது கனவு நனவானது போல இருந்தது. அந்த அளவிற்கு தனது எளிமையான, பண்பான செயல்களால் என்னை ஸ்தம்பிக்க வைத்தார் அஜய் தேவ்கன். இந்த மனிதரிடத்தில் எதுவும் பொய் இல்லை. உண்மையிலேயே இது எனக்கு ரசிகையாக மாறிய தருணம் தான்.. எனக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி அஜய் தேவ்கன்.. மீண்டும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்: என்று கூறியுள்ளார்.