விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தான் தயாரிக்கும் இசை ஆல்பத்தில் கடவுள் சிவானாக நடிக்கிறார் மன்சூர் அலிகான். ஆல்பத்திற்கு "அகம் பிரம்மாஸ்மி" (நானே கடவுள்) என்று பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய, மாற்று மதத்தை சார்ந்த இவர் ஹிந்து கடவுள் வேடமிட்டு நடிப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆல்பத்தில் கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை.
அவ்வப்போது மற்றவர்களை வம்பு இழுத்து, சர்ச்சையாக பேசி, எதையாவது வித்தியாசமாக செய்து, அதன் மூலமாக பப்ளிசிட்டி தேடிக் கொள்பவர் நடிகர் மன்சூர் அலிகான். இப்போது அவர் சிவனை வம்பு இழுக்கிறார். ஆம், சமஸ்கிருத மந்திரங்கள் பயன்படுத்தி பாடல் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, இயக்கி, ஒரு ஆல்பம் தயாரித்துள்ளார். அந்த ஆல்பத்தில் பெயர் "அகம் பிரம்மாஸ்மி".
இந்த ஆல்பம் விரைவில் வெளியாக போகிறது. அந்த ஆல்பத்தில் மன்சூர் அலிகானே சிவனாக நடித்துள்ளார். அந்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதற்கு ஹிந்து அமைப்புகள், ஹிந்து மத நம்பிக்கை உடையவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கி உள்ளனர்.
மன்சூர் அலிகான் யார்? அவர் பின்னணி, செயல்பாடுகள் எப்படி இருக்கும் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் சிவனாக நடித்து, அகம்பிரம்மாஸ்மி ஆல்பத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
சமீபத்தில் அவர் மகன் போதை விவகாரத்தில் உள்ளே சென்றவர். நில மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் இவரும் சிறை சென்று இருக்கிறார். அப்படிப்பட்டவர் கடவுள் சிவனாக நடித்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்று தெரிந்தால் தான் இவரது நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.