பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

கமல் நடித்த விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய்யின் 67வது படத்திற்காக கதை எழுதும் பணிகளை தொடங்கி இருக்கிறார். அதனால் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தற்காலிகமாக தான் விலக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதோடு அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போது மீண்டும் சமூக வலைதளத்துக்குள் தான் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விஜய் 67 வது படம் குறித்த தகவலை விரைவில் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி தற்காலிகமாக சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.




