புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவானா நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ‛சாச்சிட்டாலே' என்னும் முதல் பாடல் நாளை (ஆக.,1) மாலை வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பாடல் கம்போசிங்கிற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, 'எனக்கு பழைய யுவன் வேணும் சார்' என்று மிகுந்த ஆர்வத்துடன் எமோஷனலாக பிரதீப் கேட்கிறார்.
இதனை கேட்ட யுவன் சற்று நேரம் நிதானமாக யோசித்து விட்டு, பழைய டிரங்க் பெட்டி ஒன்றை திறக்கிறார். அதிலிருந்து தனது இளம் வயது போட்டோவை எடுத்து கொடுத்து இதுதான் பழைய யுவன்சங்கர்ராஜா என்று அவர் கூற பிரதீப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. பின்பு இயக்குநரிடம், "பழைய யுவனோ, புது யுவனோ கிடையாது. அந்த யுவனும் இந்த யுவனும் ஒன்னுதான்" எனக் கூலாக சொல்கிறார். இந்தப் புரோமோ திரைத்துறையில் 25 ஆண்டு கொண்டாடும் யுவனுக்கு வாழ்த்து கூறுவது போல வெளியாகியுள்ளது.