லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வடசென்னை. இந்த படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். மேலும் இப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இப்படத்தை தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் வடசென்னை இரண்டாம் பாகம் குறித்து வெற்றிமாறன் புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார். நேற்று தனுஷின் திருச்சிற்றம்பலம் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன் "வடசென்னை 2 படத்தின் 40 சதவீத காட்சிகள் எங்கள் கையில் உள்ளது . நான் தற்போது சூர்யாவின் வாடிவாசல் மற்றும் விடுதலை படங்களில் பிசியாக உள்ளான். எனது அடுத்த படம் கண்டிப்பாக தனுஷுடன் தான். விரைவில் தகவலை தெரிவிக்கிறோம்" எனப் பேசியுள்ளார்.