விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தெலுங்கில் குஷி, யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே தி பேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான சமந்தா, அதன்பிறகு புஷ்பா பட பாடல் மூலமும் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்தநிலையில் தற்போது டாப்சி தயாரிக்கும் படம் உள்பட சில படங்களில் அவர் அடுத்தடுத்து ஹிந்தியில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஹிந்தியில் தான் அறிமுகமாகும் படம் குறித்த தகவல்கள் வெளியாவதற்கு முன்பே அங்குள்ள முக்கிய ஊடகங்களில் தோன்றி கலக்கி வருகிறார் சமந்தா. பத்திரிகை அட்டைகளை அலங்கரிப்பது முதல் டாக் ஷோக்களில் பங்கேற்பது மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது என்று மும்பையின் பொழுதுபோக்கு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது ராஷ்மிகாவின் கைவசம் நான்கு படங்கள் இருப்பதைப்போன்று விரைவில் தான் கமிட்டாகியுள்ள படங்கள் குறித்த தகவலையும் சமந்தா அறிவிக்கப்போகிறார். அப்படி அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது பாலிவுட் முன்னணி நடிகைகளையே அதிர விடும் வகையில் சமந்தாவின் பாலிவுட் என்ட்ரி பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.