150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் | சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் |

'வலிமை' படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் .. இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.
இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது அஜித் திடீரென ஐரோப்பாவிற்கு வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றார். அங்கு பல இடங்களில் பைக்கில் அவர் சுற்றிய படங்கள் வைரலாகின. அவர் இல்லாமலேயே சமீபத்தில் மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது .