அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், சிபிராஜ் நடித்துள்ள படம் வட்டம். ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். மதுபானக்கடை படத்தை இயக்கிய கமலகண்ணன் இயக்கி உள்ளார். இந்த படம் டிஷ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது: நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும், ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும்.
நமது முழு பழக்க வழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இது தான் வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் திரைக்கதை. என்கிறார் கமலக்கண்ணன்.