கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் இசையமைப்பாளர்களில் ஒருவர் கீரவாணி. 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்தவை. தமிழில் மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நேற்று அவர் இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார். “டான்' படத்தில் இடம் பெற்றுள்ள 'பே' பாடல் போதை தரக் கூடியது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், “லவ் யூ சார்” என நன்றி தெரிவித்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விக்னேஷ் சிவன் எழுதி, ஆதித்யா ஆர்கே பாடியுள்ள பாடல் தான் 'பே'. சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த ஆதித்யா. சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் மகன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரை இறுதியில் வெளியேற்றப்பட்டவர். இருப்பினும் இந்த 'பே' பாடல் அவரை சினிமா புகழின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தெலுங்கிலும் இந்தப் பாடலை ஆதித்யாவே பாடியுள்ளார்.
'பே' பாடலின் லிரிக் வீடியோ யு டியூபில் 47 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'டான்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.