'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

'பீஸ்ட்' படக் கதாநாயகியான பூஜா ஹெக்டேவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நடனமாட நன்றாக வாய்ப்பு கிடைத்தது. 'ஹலமதி ஹபிபோ' பாடலில் அவர் ஆடிய நடனத்திற்கு மில்லியன் மக்கள் மட்டுமல்ல கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்கள்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் பூஜா எந்த ஒரு பதிவிட்டாலும் அவருக்கு மில்லியன் லைக்குகளுக்கு மேல் கிடைத்துவிடும். அவர் அணியும் ஆடைகளை ரசிப்பதற்கென்றே பெண்களும், அவருடைய அழகை ரசிப்பதற்கென்றே ஆண்களும் இருக்கிறார்கள். அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் தனது தளத்தில் பதிவிடுபவர் பூஜா.
நேற்று கடற்கரையில் மெல்லிய மேலாடை மூடிய பிகினி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். மேலாடை மூடியிருந்தால் என்ன அதுவும் அழகுதானே என்று அதற்கும் மில்லியன் பேருக்கும் மேல் லைக்குகள் போட்டிருக்கிறார்கள்.
'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு சூர்யா ஜோடியாக நடிக்க பூஜா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.