ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் தனுஷ் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . அடுத்தப்படியாக வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் நடிக்க இருக்கிறார் .
இதற்கிடையில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரேமேன் ஜூலை 22 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு அமெரிக்காவிற்கு படத்தின் புரொமோஷனுக்காக சென்றுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படம் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மார்க் கிரேனி என்பவர் எழுதிய 'தி கிரே மேன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்..