பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
2022ம் ஆண்டின் அரையாண்டில் சுமார் 65 படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. வாரத்திற்கு நான்கைந்து படங்கள்தான் வெளியாகின. வெளியான 65 படங்களில் 6 படங்கள்தான் வியாபார ரீதியாக வசூலைப் பெற்றன. மற்ற படங்கள் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தின. சில படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் ஓடிப் போயின.
இந்த வாரம் ஜுலை 8ம் தேதி 9 படங்கள் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஓரளவிற்குத் தெரிந்த முகங்கள் உள்ள படம் என்று பார்த்தால் கருணாகரன், யோகிபாபு நடித்து வெளிவரும் 'பன்னிகுட்டி' படத்தை மட்டுமே சொல்ல முடியும். மற்ற படங்கள் அதிகம் தெரியாத நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களாகவே உள்ளன.
'விக்ரம்' படம் ஜுலை 8ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர இருப்பதால் அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிடும். கடந்த வாரம் வெளியான மூன்று படங்களின் தியேட்டர்களும் நிறையவே குறைக்கப்பட்டுவிடும். அதனால், இந்த வாரம் வெளிவரும் படங்களுக்கு தியேட்டர்கள் ஓரளவிற்குக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், எத்தனை படங்கள் அதில் தாக்குப் பிடித்து ஓடும் என்பது வழக்கம் போல புரியாத புதிர்தான்.
ஜுலை 8ம் தேதி, “எண்ணித் துணிக, பன்னிகுட்டி, கிரான்மா, படைப்பாளன், நாதிரு தின்னா, பெஸ்டி, பாரின் சரக்கு, கிச்சி கிச்சி, வாட்ச், ஒற்று” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை படம் சொன்னபடி வெளியாகும் என்பது அன்றுதான் தெரியும்.