வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படம் 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவது எப்போது? என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஒரு மெகா படத்தை இயக்கப்போறேன். இந்த படத்துக்கு பிறகு நான்கு படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அந்த படங்களை முடித்த பிறகு தான் எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவேன். அந்த படத்தை இயக்குவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் ராஜமவுலி.
இந்த மகாபாரத படத்தை ராஜமௌலி கிடப்பில் போட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது குறித்து தற்போது அவர் இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளார்.