பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2014ம் ஆண்டு ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற படத்தில் நடித்த விஷ்ணு விஷால், அதை அடுத்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் ராம்குமார் இயக்கிய ராட்சசன் என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார் ராம்குமார். ஆனால் நான்கு ஆண்டுகளாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராம்குமார். இந்த படம் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், எப்ஐஆர் படத்தை அடுத்து தற்போது மோகன்தாஸ் என்ற படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் அடுத்து ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.