நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்தவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். முகமூடி படத்தை போலவே பீஸ்ட் படமும் பெரிய அளவில் ஹிட் அடிக்காததால் அடுத்தபடியாக பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் புதிய படங்கள் உடனடியாக கமிட்டாகவில்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் தற்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா அடுத்தபடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கு முன்னதாகவே சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார் சிவா.
இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டு இருப்பதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளுக்கும் பரிட்சயமான நடிகர்-நடிகைகளை அவர் ஒப்பந்தம் செய்து வருகிறார். அதனால் மூன்று மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் என்ற காரணத்தினால் இந்த படத்தில் பூஜா ஹெக்டேவை நாயகியாக நடிக்க வைப்பதில் சிறுத்தை சிவா ஆர்வம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.