ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
என்ஜிகே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், தடையற தாக்க, புத்தகம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்திலும், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்தி சிங் அடிப்படையில் ஒரு யோகா மாஸ்டர். ஐதராபத்தில் யோகா செண்டரும் நடத்தி வருகிறார். அதோடு அவர் கோவை வெள்ளியங்கிரிமலை ஈஷா மையத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர், சத்குருவின் சிஷ்யை.
சத்குரு கடந்த சில மாதங்களாக மண் காப்போம் அமைப்புக்காக உலகம் முழுக்க பைக் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தபோது அந்த பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத்தி சிங் சத்குருவோடு கோல்ப் விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவும் இருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.