ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம். புதிய படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த தளம் அந்த படத்தை வெளியிட்டு விடும், அதனை எல்லோரும் இலவசமாக பார்க்கலாம். இதனால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய இழப்பை சந்தித்து வருகிறார்கள். சில தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்சுடன் சமாதான கொடி பிடித்து தப்பித்த கதைகளும் உண்டு.
இப்படியான சூழ்நிலையில் தமிழ் ராக்கர்சை நேரடியாக எதிர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலேயே ஒரு வெப் சீரிஸ் தயாராகி உள்ளது. அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடர்குறித்து அறிவழகன் கூறியதாவது: ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனிலிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் ராக்கர்ஸ் காவலதிகாரி ருத்ராவின் கதை. சைபர் க்ரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் இந்த தொடர் வெளிப்படுத்தும். என்றார்.
இந்த தொடர் தமிழ் ராக்கர்சுக்கு எதிராக நேரடியாக உருவான தொடர் என்றாலும் இதை எதிர்த்து தமிழ்ராக்கர்ஸ் சட்ட நவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. காரணம் தமிழ்ராக்கர்சே ஒரு சட்டவிரோத இணையதளம்.