ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை பல்லாவரத்தில் இரவு பகலாக நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் சண்டைகாட்சிகள் படமாகி வருகிறது. சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் இயக்கி வருகிறார்.
கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து நொறுக்கி கைதியை பிடித்து செல்கிறார். இது படத்தின் காட்சி.
இந்த காட்சியில், சண்டை கலைஞர்கள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, அதில் டைமிங் மிஸ்சாகி எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே படத்திற்காக இதற்கு முன்பும் விஷால் சண்டை காட்சியில் காயம் அடைந்ததது குறிப்பிடத்தக்கது.