மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். இத்தனை வருடங்கள் ஆனாலும் குறைந்த படங்களுக்குத்தான் இசையமைப்பார். ஒரு வருடத்தில் அவர் இசையமைத்து வெளியாகும் தமிழ்ப் படங்கள் ஒரு சில தான் இருக்கும்.
ஆனால், 2022ம் ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களில் அவர் இசையமைப்பில் அடுத்தடுத்து ஐந்து படங்கள் வெளிவர உள்ளன. ஜுலை 15ம் தேதி பார்த்திபன் இயக்கம் நடிப்பில் 'இரவின் நிழல்', ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', செப்டம்பர் 15ம் தேதி சிலம்பரசன் நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு', செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்', டிசம்பர் 14ம் தேதி சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' ஆகிய ஐந்து படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்த அரையாண்டில் தமிழ்த் திரையிசையில் ஏஆர் ரஹ்மானின் ஆதிக்கம் தான் இருக்கப் போகிறது.
மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்டப் பணியில் உள்ளது. இதற்கடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டில் வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டு வெளியாகுமா என்பது பின்னர் தெரிய வரும்.