பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் 'கேஜிஎப் 2'. அப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
'கேஜிஎப் 2' படம் பற்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு எந்தவிதக் கருத்தையும் பதிவிடவில்லை.
ஆனால், சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தைப் பற்றியும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் அதிகமாகப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு மறைமுகமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவே 'விக்ரம்' படத்தை மகேஷ் இந்த அளவிற்குப் பாராட்டியிருக்கிறார் என தெலுங்குத் திரையுலகத்தினர் தெரிவிக்கிறார்கள்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது மகேஷ் பாபு உடனடியாக தனது மனைவி நம்ரதாவை அனுப்பி பிரசாந்த் நீலை சந்திக்க வைத்தாராம். அவரது அடுத்த படத்தில் நடிக்கவே அந்த சந்திப்பு என்கிறார்கள். ஆனால், அதற்குள் பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் அவர்கள் தரப்பிலிருந்து தயாரிப்பாளர்களை அனுப்பி பிரசாந்த நீலுக்கு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்களாம்.
அதனால்தான் 'கேஜிஎப்' படம் முடிந்த பின் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பை பிரசாந்த் நீல் ஆரம்பித்துவிட்டார். ஜுனியர் என்டிஆர் நடிக்க அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
கேஜிஎப் படம் வெற்றி பெற்றதுமே முதல் முதலாக பிரசாந்துக்கு வாழ்த்து தெரிவித்தும் அவர் தன்னைப் புறக்கணித்தது மகேஷ் பாபுவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால்தான், 'கேஜிஎப் 2' படம் வந்த போது அவர் அந்தப் படத்தைக் கண்டு கொள்ளாமல் எதுவும் பதிவிடவில்லையாம். எனவே, தான் 'விக்ரம்' படம் பற்றி பெரிய அளவில் புகழ்ந்து தள்ளி பிரசாந்த் நீலை வெறுப்பேற்றி இருக்கிறார் என்கிறார்கள்.