காதல் பிரிவில் தமன்னா - விஜய் வர்மா | சாகும் வரை நான் 'சீதா' தான் - 'ராமாயண்' தீபிகா | 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறந்த நடிகை நயன்தாரா | போதைப்பொருளாக மாறிய குளுக்கோஸ் ; படப்பிடிப்பில் அவதிப்பட்ட வில்லன் டீம் | மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி | கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை |
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி மாதவன் இயக்கி, நடித்துள்ள ‛ராக்கெட்ரி' படம் இன்று(ஜூலை 1) வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதில் அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார்.
மாதவன் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து சிம்ரன் கூறுகையில், ‛‛பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இந்திரா, இப்போது ராக்கெட்ரியில் நம்பி நாராயணனின் மனைவி. எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். 20 ஆண்டுகள் ஆகியும் மாதவன் மாறவேயில்லை. நீங்கள் தான் சிறந்தவர். உங்கள் இயக்கத்தில் பணியாற்றியது பெருமை உள்ளது'' என்றார்.