ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை இணைக்கப் போகிறது. இதில் இந்திய சினிமாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது சூர்யாவையும் ஆஸ்கர் நிர்வாக குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.