நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் மீனாவின் கணவர் மறைவு குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் நினைத்து என் மனசு வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, இன்னொரு பதிவில் இந்த விஷயத்தில் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அதனால் தயவு செய்து அவர் கொரோனாவால் இருந்ததாக யாரும் தவறான தகவலை வெளியிட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம் தான் இருப்பினும் தயவு செய்து மக்களை பயமுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.