தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பாலிவுட்டின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பதான்'. மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
ஷாருக்கான் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் முதன் முதலில் நடித்த ஹிந்திப் படமான 'தீவானா' வெளிவந்து நேற்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஷாருக்கின் 30 ஆண்டு கால சினிமாவைக் கொண்டாடும் வகையில் நேற்று 'பதான்' படத்தின் போஸ்டரை யாஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டது.
ஹிந்தியில் தயாராகி வரும் இப்படத்தை தெலுங்கு, தமிழிலும் வெளியிட உள்ளனர். தமிழ் போஸ்டர் தப்பும் தவறுமாய் வெளியிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் என்பதை 'ஷாருக்கான' எனவும், இயக்கம் என்பதை 'இகை்கம்' எனவும் தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். நன்றாகத் தமிழ் தெரிந்த ஒருவரிடம் இது குறித்த வேலையைக் கொடுத்திருக்கலாம்.
தனது 30 வருட திரையுலகப் பயணத்திற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். 'பதான்' படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.