தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழ் சினிமாவில் சமீபமாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இன்னும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராகவே இருக்கிறார் தமன்னா. தமிழில் கடைசியாக அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'அரண்மனை 4' படம் 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாகவே அமைந்தது. தற்போது தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரஸ் என நடித்து வருகிறார்.
இன்ஸ்டா தளத்தில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தத்துவமாகப் பதிவிட்டுள்ளார். "இது கண்டுபிடிக்கும் கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளராகவும், பாதி துப்பறியும் நபராகவும் இருக்கும் கட்டம். ஒவ்வொரு விவரமும் முக்கியமானது, ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது. யோசனைகள் ஒட்டும் காகிதங்களில் வாழ்கின்றன. இது இன்னும் சரியாகவில்லை (இப்போதைக்கு). ஆனால் அது அதன் வழியில் உள்ளது. நேர்மையாகச் சொன்னால், இதுதான் மந்திரம். ஒவ்வொரு பளபளப்பான பொருளுக்குப் பின்னால் ஒரு பளபளப்பற்ற செயல்முறை உள்ளது. முடிவுகளும், சந்தேகங்களும், இது தான் அந்தப் பகுதி. அறிவார்ந்த, குழப்பமான, உற்சாகமான நடுப்பகுதி," என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவங்கள்தான் நமக்கு பாடத்தைக் கற்றுக் கொடுகின்றன. அந்த விதத்தில் தமன்னாவிற்கு ஏதோ ஒரு அனுபவம் அல்லது அனுபவங்கள் இப்படியான ஒரு பதிவைப் போட வைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரேக் அப் செய்துவிட்டார். அதன் விளைவுதான் இப்படியொரு பதிவை அவர் போட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.