ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் இவர் விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆச்சார்யா, ராதே ஷ்யாம் படங்களில் நடித்தார். தற்போது ஜனகனமன என்ற தெலுங்கு படத்திலும் சர்க்கஸ், கபி ஈத் கபிர் திவாலி ஆகிய ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து தனியார் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் விபுல் நகாஷா என்பவர் பூஜா ஹெக்டேவிடம் மிரட்டும் தொணியில் நடந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பூஜா ஹெக்டே எழுதியிருப்பதாவது:
மும்பையிலிருந்து புறப்படும் தனியார் விமானத்தில் அதன் ஊழியர் விபுல் நகாஷே எங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் முற்றிலும் திமிர்பிடித்த, அறிவற்ற மற்றும் அச்சுறுத்தும் தொனியை எங்களிடம் பயன்படுத்தினார். பொதுவாக நான் இதுபோன்ற பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. ஆனால் இது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பூஜாவை மிரட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள்.