‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'விக்ரம்'. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படத்திற்கு ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வெளிநாடுகளில் முக்கிய வசூல் ஏரியாவான அமெரிக்காவில் இப்படம் 2 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படங்கள் இதுவரையில் 2 மில்லியன் வசூல் சாதனையைப் பெற்றதில்லை. முதல் முறையாக அந்த சாதனையை 'விக்ரம்' படம் நிகழ்த்தியிருக்கிறது.
இதற்கு முன்பு 2 மில்லியன் வசூலைக் கடந்த படங்களாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டுமே இருக்கிறது. “2.0' படம் 5.5 மில்லியன், 'கபாலி' 4.5 மில்லியன், 'பேட்ட' 2.5 மில்லியன், 'எந்திரன்' 2.5 மில்லியன் வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன. ரஜினிகாந்த் படங்கள் மட்டுமே பெற்ற வசூலை முதல் முறையாக கமல்ஹாசன் தனது 'விக்ரம்' படம் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்.