ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கேரளாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய்பாபு இப்போது திரும்பி வந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.
விஜய்பாபுவிடம் நடத்திய விசாரணையில் அவரை வெளிநாட்டு தப்பி ஓட ஆலோசனை சொன்னது, அவரது கிரடிட் கார்டுக்கு பணம் அனுப்பியது பிரபல மலையாள நடிகர் ஷைஜூ குரூப் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஷைஜூ குரூப்பிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் விஜய்பாபுக்கு உதவி செய்தது உண்மை தான் என்றும், விஜய்பாபு நான் நிரபராதி எனது தொழில் எதிரிகள் அந்த நடிகையை பயன்படுத்தி பழிவாங்க நினைக்கிறார்கள் என்று கண்ணீர் சிந்தியதால் நட்பின் காரணமாக அவருக்கு இந்த உதவிகளை செய்தேன். நான் உதவி செய்தபோது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என்று கூறியுள்ளார்.