காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நடிகர் விஜய் ‛பீஸ்ட்' படத்தினை தொடர்ந்து தற்போது தெலுங்கில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்து இன்று முதல் சென்னையில் துவங்கி உள்ளது. தீபாவளி வெளியீடாக இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக விஜய்யை அவரது இல்லத்தில் சிவா சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது சிவாவிடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு விஜய் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அஜித், ரஜினி ஆகியோரை இயக்கியுள்ள சிவா இதன்மூலம் விரைவில் விஜய் உடனும் இணையலாம் என கூறப்படுகிறது.